பள்ளி செல்லும் வயதில் வயிற்றில் பிள்ளை; திருச்சி மாணவி எடுத்த விபரீத முடிவு

11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கர்ப்பம் அடைந்ததால் செய்வதறியாது தவித்து வந்தார். இந்த சூழலில் அவர் எடுத்த விபரீத முடிவு அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி, அருகிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். எல்லாம் சுமூகமாய் போய் கொண்டிருந்த அவரது வாழ்வில், எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.


யாரோ ஒரு கயவனால் கர்ப்பம் அடைந்தார். இதனை தனது பெற்றோரிடம் கூட தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 23ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.